#Parasite #ஒட்டுண்ணி #English_and_Tamil
(mild spoilers ahead)
Got to watch Parasite yesterday (22-02-2020). After having watched a zillion remakes of Korean movies in Tamil, it was decided that we shall subject ourselves to the original this time. Brilliant decision, I should say.
After finishing the movie with great subtitle help, one was left with a heavy heart – although with a ray of hope.
A struggling family replete in the underbelly of Korea (South, I mean!), finds its way through skulduggery into the mansion of a super-rich family, masquerading as an English Teacher (Son), Art Therapist/Teacher (Daughter), Mercedes Driver (Dad) and Housekeeper (Mother). But when the previous housekeeper returns during a weekend, their lives go for a complete toss. What happens thereafter leads to a riveting climax that leaves us with all the familiar questions about class-divide and more!
The story is straightforward; the acting is quite subdued; hardly a note of jarring music. But what stole the show was the fantastic treatment of the story through an exotic weaving of a screenplay filled with subtle layering and subtexts.
Some samples that are still with me are…






I always say that making movies is a seriously serious business. It has the infinite capacity to make the world to look into the mirror and see its ugly side. Director #Bong_Joon_ho has managed to polish that mirror so very well, that the images that you see are crystal clear and disturbing.
PS: Aren’t there such movies in Tamil and Malayalam (I can’t look beyond these to go to Oscars!). Definitely. #Aadukalam was one such case. Even the movie #Maayaanadhi that I watched on Vasantham had incredible shoots of promise. So, it is possible and definitely doable. What is needed is for Shri Modi to talk to Mr Trump (who is reportedly cross about a Korean movie getting an Oscar – did someone tell him that it is a South Korean movie?) and make sure that the next Oscar is for an Indian movie

**** Tamil Below ****
சில நாட்களுக்கு முன் Parasite பற்றி சில வரிகள் எழுதியிருந்தேன். அப்போது படம் பார்க்கவில்லை. ஆஸ்கர் வேறு கிடைத்துவிடவே பார்க்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. எப்போதும் கொரியப் படங்களின் காப்பியைத் தமிழில் பார்த்து போர் அடித்துவிட்டதால் இம்முறை நேராகவே பார்க்க வீட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
சப்டைட்டில் உதவியுடன் படம் பார்த்து முடித்தவுடன் கனத்த மனம்.
கொரியாவில் வறுமையில் வாழு(டு)ம் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது. ஒரு பணக்காரப் பெண்ணுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கச் செல்லும் ஒரு இளைஞன் சிலபல தகிடுதத்தம் செய்து தன் தங்கையை ஒரு ஓவிய ஆசிரியையாகவும், தந்தையை கார் ஓட்டுனராகவும், அம்மாவை வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்ணாகவும் அதே வீட்டில்
நுழைத்துவிடுகிறான். சிங்கிள் டீக்கே சிங்கி அடித்துக் கொண்டிருந்த குடும்பம் சிறிது சிறிதாக நிம்மதிப் பெருமூச்சு விட, விதி பழைய பணிப்பெண்ணின் ரூபத்தில் வந்து, ஒரு வார இறுதியில் அனைத்தையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. மீதி என்னாயிற்று என்பதைக் கண்டிப்பாக வெள்ளித்திரையில் காண்க.
கதையைக் காட்டிலும் (மின்சாரக் கண்ணாவுடன் தயவு செய்து தயவு செய்து ஒப்பிட வேண்டா!),
நடிப்பைக் காட்டிலும் (ஓவர் ஆக்டிங் என்றால் கிலோ என்ன விலை?),
கதை கூறப்பட்ட விதமும், திரைக்கதைக் களனும், உறுத்தாத குறியீடுகளும் இரண்டேகால் மணி நேரம் நம்மைக் கட்டிப் போட்டன.
கொரியாவில் இருக்கும் ஏழை-பணக்கார ஏற்ற தாழ்வுகளை மெல்லிழையாகப் படம் முழுக்க நெளியவிட்டு, கடைசியில் பளீரென அடிக்கும்போது வலிக்கிறது.






சினிமா என்பது ஒரு அதீதக் கலை. அது புண்ணாகிக் கிடக்கும் கலாச்சாரத்தை வெளிச்சமிட முடியும் ஒரு சீரிய ஆடி. இப்படத்தின் மூலம் இயக்குனர் #பாங்_ஜூன்_ஹோ அதை அழகாகப் பாதரசமிட்டு நம்மையே அதில் பார்க்கச் செய்துள்ளார். #ManInTheMirror
படத்தில் ஒரு வசனம் வரும்.
’அந்த அம்மா பணக்காரியாக இருந்தாலும், ரொம்ப நல்லவங்க!’
‘இல்லை! அவங்க பணக்காரி. அதனாலதான் நல்லவங்க! பணம் ஒரு இஸ்திரி பொட்டி மாதிரி! எல்லா கசங்கலையும் நேராக்கிடும்!’
ஒரு ஏழையின் பார்வையில் இருசாராரின் வாழ்வும் எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதை இதற்கும் மேல் சொல்ல முடியாது!
பி.கு.: தமிழில்/மலையாளத்தில் இது போன்ற படங்கள் இல்லையா? கண்டிப்பாக இருக்கின்றன. #ஆடுகளம் என்னைப் பொறுத்தவரையில் கண்டிப்பாகத் தகுதி பெற்ற ஒன்று. இன்று வசந்தம் ஒளிவழியில் பார்த்த மலையாளப் படமான #மாயாநதி ’அட!’ என்று நிமிர்ந்து உட்கார வைத்தது. தொட்டுவிடும் தூரம் தான்! இதோ ட்ரம்ப் வந்துவிட்டார். மோடி அவரிடம் பேசி அடுத்த வருடம் இந்தியப் படம் ஒன்றுக்கு ஆஸ்கார் வாங்கிக் கொடுப்பார் என நம்பிக் கொண்டு… 

No comments:
Post a Comment